பிரபல நடிகர் ஹோட்டல் அறையில் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை..

பிரபல நடிகரின் மர்ம மரணம் குறித்து, தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு:

பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர். இவர் சீரியல்கள் தவிர ‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ‘அம்மா இறைத்தே’, ‘பஞ்சாக்னி’, ‘சுந்தரி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். 50 வயதான இவர், தனது திறமையான நடிப்பின் மூலம், தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில், சின்னத்திரை தொடர் ஒன்றில் படப்படிப்பிற்காக, கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார் திலீப்.

இச்சூழலில், அவரது படக்குழு அவரை தொடர்பு கொள்ள முயன்றள்ளனர். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, கிட்டதட்ட 2 நாட்கள் அவர் ரூமை விட்டு வெளியே வரவில்லை என ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அவரது அறையை திறந்து பார்த்தபோது, அவர் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், ‘அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் கதவை உடைத்தபோது, அவர் அசைவற்று கிடந்தார்’ என்றனர்.

இந்த மரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாக நம்பப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மரணத்திற்கான காரணம் உள் இரத்தப்போக்கு, கீழே விழுந்த பின்னர் தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம்’ என தெரிவித்துள்ளனர். சில நாட்களாகவே அவருக்கு உடல் நலப்பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், அவரது மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை என, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது மரணம் மர்ம மரணமாக கருதப்படுவதால், அது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டர் மற்றும் அதை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விசாரணை நடந்து வருகிறது.

actor dileep sankar found dead in hotel
actor dileep sankarinvestigationpoliceநடிகர் திலீப் சங்கர்விசாரணை