Browsing tag

police

ஹோட்டல் அறையில் பிரபல நடிகர் மரணம்..

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் (51). சின்னத்திரை, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக, கேரள மாநிலம் சோட்டானிக்கராவுக்கு வந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததால் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் அறையின் கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது கலாபவன் நவாஸ் சுயநினைவின்றி இருந்தார். […]

எனக்கு மிரட்டல் வருகிறது, பாதுகாப்பு வேண்டும்: கவுதமி போலீஸில் புகார்..

நடிகை கவுதமி தனக்கு பாதுகாப்பு கோரி இன்று போலீஸில் மனு கொடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி கொடுத்துள்ள மனுவில், ‘தன்னுடன் பணியாற்றி வந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீலாங்கரையில் உள்ள ரூ. 9 கோடி மதிப்புள்ள தனது சொத்தை அழகப்பன் அபகரித்ததாக’ புகார் கொடுத்துள்ளார். இந்த 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக மாநகராட்சியில் மின் இணைப்பு , கட்டிட அனுமதி பெற்று தனது நிலத்தில் கட்டுமான பணிகள் […]

சந்தானம்-ஆர்யாவை கைது செய்யவேண்டும்: போலீஸில் புகார்..

ஆர்யா தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்க, சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு வந்த பிரச்சினை குறித்து காண்போம்.. அதாவது, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலில் பெருமாளை கிண்டல் செய்திருப்பதாக சந்தானம், ஆர்யா மீது சேலம் பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். வலசையூரை சேர்ந்தவரான அஜித் […]

சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: பரபரப்பு; போலீஸ் விசாரணை

மும்பை வொர்லியில் உள்ள போக்குவரத்து துறைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில், நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கானின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும் சல்மானை கொலை செய்வோம் என்றும் அந்த மெசேஜில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கானுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல்கள் வந்துள்ளன. 1998-ம் ஆண்டு மான் வேட்டை வழக்கில் சல்மான் கானை குறிவைத்து […]

நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு, நகை-பணம் கொள்ளை: திரையுலகில் பரபரப்பு

நடிகை ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவம் பற்றிய தகவல்கள்.. கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள, பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள வசாப் டேங்கில் இருக்கும் ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அவரை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத 4 பேர் அவரிடம் இருந்த பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகையின் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த புகாரில் நடிகை […]

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 25 பேர் மீது எஃப்ஐஆர்..

தெலுங்கு திரையுலக பிரபலங்கள் 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரம்மி விளையாட்டுகள் போன்ற பல பெட்டிங் ஆப்கள் இளைஞர்களின் பணத்தை சூறையாடி அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுகிறது. ‘மதுவினால் வரும் போதைபோல’ விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற போதையை சில முன்னணி நடிகர்களே காசுக்காக விளம்பரப்படுத்தி, ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என ஹைதராபாத்தை சேர்ந்த […]

பொய்யான குற்றச்சாட்டு, நான் தங்கம் கடத்தவில்லை: நடிகை ரன்யா ராவ் திடீர் பல்டி

வாழ்க்கையில் ரீல் நடிப்பும் உண்டு, ரியல் நடிப்பும் உண்டு. இவைகளை கண்டு தெளிவது நன்று. இனி, விஷயத்திற்கு வருவோம்.. ‘தங்கம் கடத்தல் வழக்கில் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வேறு யாரையோ பாதுகாக்க என்னை குற்றவாளியாக கருதுகிறார்கள்’ என்று நடிகை ரன்யா ராவ் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் கடத்திய வழக்கில் டிஆர்ஐ அதிகாரிகளால், நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள […]

சாலையில் ஒரு பெண் ஷூவை கழற்றி அடிக்க வந்தார்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புகார்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 8.55 மணி இருக்கும். நான் பேட்மின்டன் விளையாடி முடித்துவிட்டு காரை ஓட்டி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். பாலவாக்கம் பல்கலை நகர் சாலையின் இறுதிப் பகுதிக்கு வரும்போது, கொட்டிவாக்கம் AGS Colony பகுதியிலிருந்து ஒரு குறுகலான தெரு, இந்த சாலையில் வந்து இணைகிற இடத்தில் ஒரு சின்ன கார் அதன் வழியாக, படுவேகத்தில் நேராக வருகிறது. நான் கடற்கரை சாலையை நோக்கி நேராகச் சென்றேன். வளைவிலிருந்து வந்து இந்த […]

ஐபிஎஸ் அதிகாரியின் மகள்- நடிகை ரன்யா 15 கிலோ தங்கம் கடத்தல்; போலீஸ் விசாரணை..

ஐபிஎஸ் அதிகாரியின் மகள்-நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கன்னட நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக ‘மாணிக்யா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரன்யா ராவ். இவர், கர்நாடகாவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி விமான நிலைய பாதுகாவலர்களையும் மீறி தங்கத்தை கடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. திங்கள்கிழமை இரவு துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்த நடிகை ரன்யா, […]

நடிகர் சோனுசூட்டுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு: திரையுலகில் பரபரப்பு

சோனுசூட் மீதான பிடிவாரண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றம், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா கொடுத்த, ரூ.10 லட்சம் மோசடி வழக்கில் தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாக மோஹித் சுக்லா, மற்றும் ரிஜிகா காயின்லா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலீடு திட்டம் ஒன்றில், பணம் போட்டால் அதிக லாபம் […]