இந்தி திரையுலகில் ‘கூலி’ படத்துக்காக களமிறங்கிய அமீர்கான்..

சூப்பர் ஸ்டார் நடித்த ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமீர்கான். இந்தி தவிர்த்து இதர மொழிகளில் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடர்பாக ‘கூலி’ படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்து முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்தியில் ‘வார் 2’ வெளியாவதால் அப்படத்துக்கே முன்னுரிமை வழங்கி வந்தார்கள்.

தற்போது ‘கூலி’ படத்துக்காக தாமாக முன்வந்து பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகத்தினரிடம் பேசியிருக்கிறார் அமீர்கான். இதன் மூலம் இரண்டு படங்களுக்கும் சரி சமமாக திரையரங்குகள் பிரிக்கப்படும் என தெரிகிறது. அமீர்கானின் இந்த செயலால் வர்த்தக நிபுணர்கள் பலரும் ஆச்சரியத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஏனென்றால், ‘கூலி’ படத்தில் நடித்ததற்காக அமீர்கான் சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், படத்துக்கு திரையரங்குகள் கிடைக்க அவரே களமிறங்கியிருப்பது இந்தி திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது. இதனால் இந்தியிலும் ‘கூலி’ படத்துக்கு கணிசமான திரையரங்குகள் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 11-ந்தேதி மும்பையில் ‘கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

aamirkhan debut for coolie movie trade experts are surprised
actor aamirkhancoolie movieRajinikanthஅமீர்கான்லோகேஷ் கனகராஜ்