’29’ என்ற படமும் ’96’ என்ற படமும் குறித்த அப்டேட்ஸ்..

‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ரத்னகுமார், ‘ஆடை’, ‘குலுகுலு’ ஆகிய படங்களை இயக்கினார். மேலும், ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இந்நிலையில், ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்திற்கு 29 எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

‘96’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆதித்யா பாஸ்கர். அதில் கெளரி கிஷனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்துக்குப் பிறகு தற்போது இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடித்து முடித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி,

‘உண்மை சம்பவத்தை தழுவி தற்போதைய ஜென் ஜீ தலைமுறையினர் ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இதில் ’96’ படத்திற்கு பிறகு மீண்டும் ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் ஜோடி திரையில் மேஜிக் செய்திருக்கிறார்கள். இது அனைத்து ரசிகர்களையும் கவரும்’ என கூறியுள்ளார்.

aadhitya baaskar and gouri kishan have team a new film

 

29 movieactress gouri kishanstoryகதைலோகேஷ் கனகராஜ்