மோகன்லால் ரசிகர்களுக்கு விருந்து – மே 20 முதல் 30 வரை பிரமாண்ட திரைப்பட விழா!

மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டார்; 115 சிறப்பு படங்களுடன் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழா!

இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான Mohanlal அவர்களின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், ஜியோஹாட்ஸ்டார்; நிறுவனம் ‘Mohanlal – The Complete Actor’ என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை நடத்துகிறது.

மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு கொண்டாட்டத்தில், அவரது திரை வாழ்க்கையை வடிவமைத்த 115 கல்ட் கிளாசிக்ஸ், பிளாக்பஸ்டர் ஹிட்கள், திரில்லர்கள், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்கள் ரசிகர்களுக்காக ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

இந்த சிறப்பு தொகுப்பில் Drishyam, Manichitrathazhu, Vanaprastham, Bharatham, Pulimurugan, Oppam, Neru, Janatha Garage, Bro Daddy, Barroz, 12th Man மற்றும் L2: Empuraan உள்ளிட்ட பல்வேறு முக்கியமான திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

ரசிகர்களின் பார்வை அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், ‘Mohanlal Cult Classics’, ‘The Complete Lalettan Swag’, ‘Lalettan LOL Universe’, ‘Best Mohanlal Thrillers’ மற்றும் ‘Mohanlal Heart & Home’ போன்ற தனிப்பட்ட தொகுப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மோகன்லாலின் நடிப்புத் திறன், மாஸ் தருணங்கள், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் மற்றும் நகைச்சுவை முத்திரைகளை மீண்டும் ரசிக்க இந்த தொகுப்புகள் வாய்ப்பளிக்கின்றன.

இந்த திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, ஜியோஹாட்ஸ்டார் ‘Mohanlal Super Fan Contest’-ஐயும் நடத்துகிறது. மோகன்லாலின் பிரபலமான திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் ரசிகர்களுக்கு, அவர் கையொப்பமிட்ட பிரத்யேக டி-ஷர்ட்களை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

பல தலைமுறைகளாக ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள மோகன்லால், இந்திய திரைத்துறையின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து திகழ்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு திரைப்பட விழா, அவரது மறக்க முடியாத படைப்புகளை மீண்டும் ஒருமுறை கொண்டாட ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

A Feast for Mohanlal Fansmohanlalமோகன்லால்