கூத்துப்பட்டறையில் இருந்து திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய் சேதுபதி. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், விக்ரம் வேதா, 96 உள்பட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.
தற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அவர் வெளிப்படையாக பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள்.
நான், ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது. தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும், அந்த கடன் பிரச்சினை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால், அதனுடனேயே வாழக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வதுதான் சவால்’ என கூறியுள்ளார்.