AMMK cooker logo
AMMK cooker logo

AMMK cooker logo – டெல்லி: அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடியாக 300 பக்கத்திற்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் டெல்லி ஹைகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இதனால் டிடிவி தினகரன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும்” என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

அதே சமயம் குக்கர் சின்னம் கிடைக்காததால் இதுவரை அமமுக கட்சியை சேர்ந்த யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளைத்தான் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டு இருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தற்போது இந்த வழக்கில் 300 பக்கத்திற்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதன்படி அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் இந்த 300 பக்கங்கள் முழுக்க அமமுகவிற்கு ஏன் குக்கர் சின்னம் கொடுக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது.

அதில் சில, “குக்கர் சின்னம் என்பது பொதுவானது, அதை டிடிவி தினகரனுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது.

அமமுக பதிவு செய்யப்பட கட்சி கிடையாது. அதனால் சின்னத்தை ஒதுக்க முடியாது. வேண்டுமானால், அமமுகவிற்கு வேறு சின்னம் வேண்டுமானால் ஒதுக்கலாம் ” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.