உலகளவில் அமரன் படத்தின் வசூல் இவ்வளவா.. அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு தெரியுமா?

Web Ads

உலகளவில் அமரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

amaran movie 20 days collection update
amaran movie 20 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும்,உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலராலும் இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டு வந்தது சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

20 நாட்கள் கடந்த நிலையில் உலக அளவில் 302 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 142 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

amaran movie 20 days collection update
amaran movie 20 days collection update