Trend Loud நிறுவனம் தென்னிந்திய டிஜிட்டல் துறையில் அழுந்த கால்பதித்து பெரும் நிறுவனமாக வளர்ந்து வருகிறது.

Akshara Haasan Upcoming Movie Update : தென்னிந்திய OTT மற்றும் YouTube தளங்களுக்கு ஒரிஜினல் தொடர்கள் தயாரித்து தருவதில் முதன்மையாக விளங்கும் Trend Loud மேலும் கார்பரேட் மற்றும் ஊடக நிறுவங்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகள், பிரபலங்களின் சமூக வலைதள தொடர்புகளை மேற்பார்வை செய்தல் மற்றும் YouTube ல் பல்வேறு சேனல்களை கட்டுப்படுத்துதல், தொடர்களின் உரிமம் சார்ந்த தீர்வுகள், மார்க்கெட் வியாபித்திருத்தல் போன்ற துறைகளில் அனைவரும் பிரமிக்கும் வகையில் கோலோச்சி வருகிறது.

தென்னிந்திய துறையில் பிரபல நிறுவனங்களாக விளங்கும் OTT தளங்களான Amazon, Hotstar, MX Player, ZEE5, Aha, Sony Liv, Viu ஆகிய நிறுவனங்களுக்கு 15 க்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்துள்ள Trend Loud நிறுவனம் தற்போது தனது முதல் முழு நீள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.

‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்

தான் தயாரித்த தொடர்கள் மூலம் ரசிகர்களிடம் தனித்த வரவேற்பை பெற்றுள்ளது Trend Loud நிறுவனம். இந்நிறுவனம் தொடர்களை எப்போது அறிமுகப்படுத்தினாலும் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பும் வரவேற்பும் கிடைப்பது தவறுவதே இல்லை.

வரலாற்று நாயகன் பெருமைமிகு S.ராமமூர்த்தி நிறுவி நான்கு தசாப்தமகா சின்னத்திரையில் இயங்கி வரும் Vision Time நிறுவனம் இந்நிறுவனத்திற்கு பெரும் ஊக்கமாக, இணை நிறுவனாக இருப்பதால் ரசிகர்களிடம் இயல்பாகவே Trend Loud க்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. சின்னத்திரையின் முதன்மைமிக்க பார்வையாளர்களாக பெண்கள் இருப்பதால் அத்துறையில் கோலோச்சி அவர்களின் ரசனையை கைக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம்.

இந்நிலையில் பெண்கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து அதில் நடிகை அக்‌ஷரா ஹாசன் நடிக்க, தனது முதல் முழு நீளத் திரைப்படத்தை தயாரிக்கிறது Trend Loud. ஓரின சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தமிழின் முதல் காமெடி தொடராக ZEE5 ல் வந்து வெற்றி பெற்ற “அமெரிக்க மாப்பிள்ளை” தொடரை இயக்கிய இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இத்திரைப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இத்திரைப்படம் குறித்து கூறியதாவது…

இப்படத்தின் கதை பதின் பருவ இளம்பிராயத்தில் உள்ள, ஒரு அறிவார்ந்த இளம்பெண், ஒரு கட்டுப்பெட்டித்தனாமான குடும்பத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்புகள் தான்.

சமூகத்திற்காக குடும்பத்திற்காக தனது ஆசைகளை துறக்க முடியாமல் இரண்டையும் சமன்படுத்தி அப்பெண் வாழ முயல்வதே கதை. இப்படம் கதை சம்பந்தாமாக மட்டுமே பெண்களை மையப்படுத்திய படம் அல்ல இப்படத்தில் பணிபுரிபவர்களிலும் பெரும்பான்மையோர் பெண்களே!. பெண்களின் பார்வை படத்தில் அதிகமாக இருக்க வேண்டுமெனவே இம்முடிவு எடுக்கப்பட்டது.

இப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரம் தற்காலத்திய நவநாகரீக உலகின் பெண் பிரஜையை மையப்படுத்தியது எனவே அதில் அக்‌ஷரா ஹாசன் நடிப்பது எனக்கு பெருமகிழ்ச்சி.

இதுவரை ஏற்றிராத ஒரு கதாப்பாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் ரசிகர்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்துவார். செப்டம்பர் 14, 2020 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வெகு ஆர்வமாக காத்திருக்கிறோம் என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.