நடிகர் அஜித் குமாரின் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

அஜித்தின் ஏகே 62… வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆவதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான “ஏகே 62” திரைப்படம் குறித்த அப்டேட்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்தின் ஏகே 62… வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

அந்த வகையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் “ஏகே 62” திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மும்பையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.