துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வென்றுள்ளார் தல அஜித். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ajith Won Gold Medal in Gun Shoot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.நடிகராக மட்டுமல்லாது பைக் ரேஸ், கார் ரேஸ், சைக்கிளிங், ட்ரோன் வடிவமைப்பு, துப்பாக்கி சுடுதல் என பல திறமைகளை தனக்குள் வைத்து கொண்டுள்ளார்.

46-வது தமிழ்நாடு மாநில ஷூட்டிங் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் சென்னை ரஃபில் கிளப் சார்பில் அஜித் பங்கேற்று தங்கம், வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.

இது குறித்த தகவல்கள் புகைப்படங்களுடன் வெளியாக அஜித் ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/TeamThalaFC/status/1368524197757001734?s=19