Ajith Vs Vijay in Clashes History

இதுவரை நேருக்கு நேராக மோதி இல்ல அஜித் விஜய் திரைப்படங்கள் என்னென்ன அவற்றில் வெற்றி பெற்ற திரைப்படம் எது என்பதை பார்க்கலாம்.

Ajith Vs Vijay in Clashes History : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனுக்கு அடுத்ததாக இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.

இதுவரை இவரது படங்கள் 6 முறை நேருக்கு நேராக மோதிக் கொண்டுள்ளன. அவை என்னென்ன பலன்கள் இந்த மோதலின்போது வெற்றி பெற்றது யாருடைய திரைப்படம் என்பது எல்லாம் பார்க்கலாம் வாங்க.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடம் இரண்டாமிடம் பிடித்த அணிகள்..

  1. ஜில்லா – வீரம் :

2014ஆம் ஆண்டு பொங்கலுக்கு தளபதி விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதின.

ஜில்லா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. வீரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.

அஜித்தை வச்சு Hollywood Range-ல தான் எடுப்பாங்க? – Valimai Glimpses Public Reaction | H.Vinoth

  1. போக்கிரி – ஆழ்வார் :

2007 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த இரண்டு திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த மோதலில் போக்கிரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. ஆனால் அஜித்தின் ஆழ்வார் திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

  1. பகவதி – வில்லன் :

இந்த இரண்டு படங்களில் 2002ஆம் ஆண்டு தீபாவளிக்கு மோதிக்கொண்டன. பகவதி திரைப்படம் விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த வில்லன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

  1. ஃப்ரெண்ட்ஸ் – தீனா :

இவ்விரண்டு படங்களும் 2001ஆம் ஆண்டு பொங்கலுக்கு மோதிக்கொண்டன. சூர்யா மற்றும் விஜய் இணைந்து நடித்திருந்தார் பிரண்ட்ஸ் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதேபோல் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான தீனா படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

  1. குஷி – உன்னைக் கொடு என்னைத் தருவேன் :

கடந்த 2000ம் ஆண்டில் கோடை விடுமுறையில் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேராக எழுதினேன். எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் உன்னை கொடு என்னை திரைப்படம் அஜித்திற்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

  1. பூவே உனக்காக – கல்லூரி வாசல் :

கடந்த 1996 ஆம் ஆண்டில் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகின. இந்த மாதமே பூவே உனக்காக திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால் அஜித் நடிப்பில் வெளியான கல்லூரி வாசல் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. ‌‌ ‌‌‌‌‌

பீஸ்ட் – வலிமை :

இந்த படங்களை தொடர்ந்து வரும் 2022 பொங்கலை தளபதி விஜய் பீஸ்ட் மற்றும் தல அஜித் வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் மோத உள்ளன. இந்த மோதலில் ஜெயிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.