ajith
ரசிகர்களுடன் நடிகர் அஜித் செல்பி எடுக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith taking selfie with fans viral video – நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அஜித் ஒரு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தனது கெட்டப்பை மாற்றி வருகிறார்.

கை கொடுக்க தயங்கிய ரசிகர் தல அஜித் செய்த காரியத்தை பாருங்கள் – வைரல் வீடியோ .

க்ளீன் சேவ், ட்ரிம் தாடி, கண்ணாடி, கோட் என அவர் புதிய கெட்டப்பில் காட்சியளிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த இடம் விமான நிலையம் போல் இருக்கிறது.

அங்கு சில ரசிகர்களுடன் அஜித் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ரசிகரிடமிருந்து மொபைலை வாங்கி அவரே செல்பி எடுத்தார்.

ஆனால், இது தல60 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதா என சரியாக தெரியவில்லை.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.