Ajith Request to Director Mahendran
Ajith Request to Director Mahendran

தல அஜித் இயக்குனர் மகேந்திரனிடம் வைத்திருந்த கோரிக்கை குறித்து அவரது மகன் ஜான் மகேந்திரன் கூறியுள்ளார்.

Ajith Request to Director Mahendran : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ஜானி. நடிகை ஸ்ரீதேவி, நடிகர் சுருளிராஜன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இயக்குனர் மகேந்திரன் இயக்கியிருந்தார்.

இப்படத்தை பார்த்து விட்டு தல அஜித் இயக்குனர் மகேந்திரனிடம் இந்த படத்தை ரீமேக் பண்ணுங்க சார்.. நான் நடிக்கிறேன் என கூறியதாக நான் கேள்விப்பட்டதாக மகேந்திரனின் மகன் இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பல்பு கொடுத்த தீனா, அடி கொடுத்து மீண்டும் பல்பு கொடுத்த தளபதி விஜய் – முதல் முறையாக வெளியான மாஸ்டர் சூட்டிங் ஸ்பாட் கலாட்டா!

ஆனால் அப்பாவிற்கு முள்ளும் மலரும் ஜானி என எந்த படத்தையும் ரீமேக் செய்ய விரும்பமில்லை என கூறியுள்ளார்.

இயக்குனர் ஜான் மகேந்திரன் தளபதி விஜய்யை வைத்து சச்சின் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

மேலும் அவர் சமீபத்தில் சச்சின் படத்தின் இரண்டாம் பாகத்தில்விஜய்யை பார்க்க விரும்புவதாகவும் அந்த படத்தை நான் இயக்கினாலும் சரி, வேறு இயக்குனர் இயக்கினாலும் சரி அதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.