Ajith Phone Call to Shanthanu
Ajith Phone Call to Shanthanu

சாந்தனுவிற்கு தல அஜித் தரப்பில் இருந்து போன் கால் வந்ததாக கூறி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Ajith Phone Call to Shanthanu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு மே 1 பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அதனை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக காமன் டிபி புகைப்படத்தை மொத்தம் பதினான்கு பிரபலங்கள் வெளியிட இருந்தனர். அதில் ஒருவர் சாந்தனுவும்.

அன்பு, நேர்மை, உழைப்புக்கு 100% பொருத்தமானவர் நம்ப தல, பிரபல நடிகர் புகழாரம் – வைரலாகும் பதிவு.!

ஆனால் சாந்தனு அஜித்தின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிடவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை அவர் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் என்னுடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என அஜித் கூறியிருந்தார்.

அவர் ரசிகர்களுக்கு அன்பு கட்டளை வைத்திருந்தது போலவே இந்த 14 பிரபலங்களுக்கும் போன் கால மூலமாக இதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனைத்தான் நடிகர் சாந்தனு பிரமிப்புடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.