Ajith Latest Video
Ajith Latest Video

Ajith Latest Video – ’அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

25 ஆண்டுகள்.. 58 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் அஜித்.

அஜித்தின் எளிமை நாடறிந்தது. இதற்கு உதாரணமாக அண்மையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. தனது மனைவி மற்றும் மகள் அனோஷ்காவுடன் பேட்மிண்டன் விளையாட சென்ற அஜித், ஊழியர்களுடன் சகஜமாக கைக்குலுக்கி விளையாட செல்லும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சிசிடிவி காட்சி 2017-ம் ஆண்டே பதிவு செய்யப்பட்டது என்றாலும் அது தற்போது வேகமாக பரவி வருகிறது.

YouTube video