பைக்கில் சுற்றுலா சென்றுள்ள நடிகர் அஜித்குமார் தற்பொழுது பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள அஜித்!! - புதிய வைரல் புகைப்படங்கள் இதோ!.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தனக்கான படப்பிடிப்பு பணிகளை முடித்த பிறகு ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அவர் காஷ்மீர், லடாக், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தில் நடிகர் அஜீத் குமார் தனது நண்பர்களுடன் இணைந்து Ak61 திரைப்படத்தின் கதாநாயகியும் பிரபல நடிகையுமான மஞ்சு வாரியரையும் அழைத்து சென்று இருக்கிறார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள அஜித்!! - புதிய வைரல் புகைப்படங்கள் இதோ!.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில் தற்போது நடிகர் அஜித் குமார் ஜம்மு காஷ்மீருக்கு பைக்கில் தனது குழுஉடன் சென்று அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து வருகிறார் அது மட்டுமின்றி அங்குள்ள புத்த மத ஆலயத்தில் அஜித் வழிபாடும் செய்திருக்கிறார். அந்த லேட்டஸ்டான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து அவர் தற்பொழுது பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படங்களை தங்களது சமூக வலை தல பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள அஜித்!! - புதிய வைரல் புகைப்படங்கள் இதோ!.
கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள அஜித்!! - புதிய வைரல் புகைப்படங்கள் இதோ!.