Ajith Helps to Actor Theepetti Ganesan
Ajith Helps to Actor Theepetti Ganesan

உதவி கேட்டு கண்ணீர் விட்ட நடிகருக்கு அஜித் உதவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Ajith Helps to Actor Theepetti Ganesan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தான் செய்யும் உதவி மற்றவர்களுக்கு தெரியாதவாறு பலருக்கும் இன்றுவரை உதவி வருகிறார்.

அஜித்தை பின்தொடரும் விஜய், தளபதியின் கொரானா நிதியால் திடீரென ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக் – காரணம் என்ன?

இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லை பில்லா-2 உள்ளிட்ட படங்களில் நடித்த தீப்பெட்டி கணேசன் கண்ணீர் விட்டு கலங்கினார். மேலும் இவர் அஜித் எனக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து ராகவா லாரன்ஸ் அவருக்கு உதவினார். கவிஞர் சினேகன் வீட்டிற்குச் சென்று உதவி இருந்த நிலையில் இந்த விஷயம் அறிந்த அஜித் தன்னுடைய மேனேஜர் மூலமாக அவருக்கு உதவி செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.