அஜித் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் குக் வித் கோமாளி சிவாங்கி.

Ajith Fans Blast Shivangi : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான சிவாங்கி. இதனையடுத்து இவர் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.

அஜித் ரசிகர்களிடம் சிக்கிய ஷிவாங்கி.. வெளியான பேட்டி வீடியோவால் வச்சு செய்யும் ரசிகர்கள்

குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள சிவாங்கி வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது சிவாங்கி அஸ்வின் ஆகியோர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் இறுதியாக வெளியான விஜயின் படம் இது என கேட்டதற்கு மாஸ்டர் என சரியாக கூறுகிறார் சிவாங்கி.

இதனையடுத்து இறுதியாக வெளியான அஜித்தின் படம் எது என கேட்டதற்கு விவேகம், வேதாளம் என்று தவறாக கூறுகிறார். மேலும் புது படம் வரப் போகுது அப்டேட் கேட்டுக்கிட்டே இருப்பாங்க எனவும் பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகி சிவாங்கியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும் ஷிவாங்கி சின்ன பொண்ணு தெரியாம இப்படி பேசிட்டாங்க எனவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.