Ajith and Boney kapoor :
Ajith and Boney kapoor :

Ajith and Boney kapoor :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தை ரஷ் பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் நடிப்பில் மிரட்டியிருப்பதாக பாராட்டியிருந்தார்.

மேலும் அஜித் இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்றும் டிவிட்டர் வாயிலாகவே அவர் விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு அஜித்தின் ரியாக்ஷன் என்னவென்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

அஜித்தை பொறுத்தவரை ஒரு தயாரிப்பாளரின் குணம் பிடித்துவிட்டால் தொடர்ந்து அவருக்கே வாய்ப்புகள் கொடுப்பார்.

அந்தவகையில் அடுத்த அஜித் படத்தையும் போனி கபூர் தான் இயக்குகிறார். முதல் படத்தில் போனி கபூரின் செயல் திருப்திகரமாக இருந்ததாம்.

அதேபோல் இரண்டாவது படத்திலும் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றால் அப்போது போனி கபூரின் இந்தி அழைப்பு பற்றி யோசிக்கலாம்.

அதுவரை அடுத்த படத்தில் மட்டுமே கவனம் செலுத்தலாம் என அஜித் யோசித்திருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here