இன்று மாலை அஜித் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச். வினோத் அவர்களுடன் கூட்டணி அமைத்து போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 61 வது படத்தில் நடித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. அஜித் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் வல்லமை ராபரி என இருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் நேற்று துணிவே துணை என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் 61 படத்தின் டைட்டில் என்ன என்பது இன்று மாலை உறுதியாக தெரிந்து விடும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.