வெறித்தனமான ஒர்க்கவுட் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aishwarya Rajinikanth in Workout Video : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

வெறித்தனமான ஒர்க்கவுட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. விவாகரத்துக்குப் பிறகு இணையத்தில் வைரலாகும் வீடியோ

இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களுடைய இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்து விட்டனர்.

வெறித்தனமான ஒர்க்கவுட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. விவாகரத்துக்குப் பிறகு இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தீயாக வொர்க் அவுட் செய்யும் வெறித்தனமான வீடியோவை இணையத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் பலரையும் வியக்க வைத்து வருகிறது.