Airaa

Airaa Release Date : நயன்தாராவின் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ஐரா. சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா, கலையரசன் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஐரா.

KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருந்தது. தற்போது படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வரும் மார்ச் 28-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.