மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம். தெலுங்குவில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஒன்றின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

படத்தில் நாயகியாக ரிதா சுமன் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவி புகழ், முனீஸ் காந்த், குருசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைக்களம் :

சிறுவயதில் அம்மா மீது ஏற்பட்ட கோபத்தால் அவரை விட்டு தனியாக சிட்டியில் வாழ்ந்து வருகிறார் கண்ணாயிரம். திடீரென ஒரு நாள் அவரது அம்மாவின் இறப்புச் செய்தி அவருக்கு தெரிய வர அம்மாவின் கடைசியாக பார்க்க ஊருக்கு கிளம்ப முடிவெடுக்கிறார். கையில் பணம் இல்லாமல் ஒரு வழியாக லாரியில் லிப்ட் கேட்டு ஊர் வந்து அடைந்தும் அம்மாவை பார்க்க முடியாமல் போகிறது. இதே குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கும் சந்தானம் அந்த ஊரில் நடக்கும் மரணங்கள் பின்னாடி இருக்கும் மர்மங்களை கண்டறிய ஒரு பிரைவேட் டிடெக்டிவாக வேலை பார்க்கிறார்.

இப்படியான சூழலில் திடீரென ரயில் தண்டவாளம் அருகே நடக்கும் ஒரு மரணத்திற்கு சந்தானம் தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்படுகிறார். சிறையில் இவர் ஒரு நபரை சந்திக்கிறார், அந்த நபர் சொன்ன கதைகள் முழு நேர டிடெக்டிவாக மாறுகிறார். யார் இந்த நபர்? அவர் சொன்ன கதை என்ன? ஏஜென்ட் கண்ணாயிரம் ஆக சந்தானம் ஜெயித்தாரா என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்துள்ளார் சந்தானம். எமோஷன் ஆக்சன் திரில்லர் என அனைத்து விதமான ரியாக்சன் களையும் அழகாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மெடிக்கல் மாஃபியாவை கண்டறியும் நபர் ஆகவும் சந்தானம் படத்தில் கலக்கியுள்ளார்.

விஜய் டிவி புகழ் நடிப்பு சூப்பர். காமெடி சிரிக்க வைக்கிறது. முனீஸ் காந்தி நடிப்பு அபாரம், அவர் படத்தில் அழும் காட்சி நம்மையும் கலங்க வைக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பலம்.. ஆனாலும் படத்தில் பாடல்கள் இல்லாதது ஒரு குறை.

இயக்குனர் மனோஜ் ரீமேக் கதை என்றாலும் அதை அழகாக கொண்டு சென்றுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.