ADMK Plan Against to DMK

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.

ADMK Plan Against to DMK : #திமுகவிற்குமுற்றுப்புள்ளிவைப்போம் என்கிற பிரச்சாரத்தை இன்று முதல் துவங்கியுள்ளது அதிமுக. சமூக ஊடகங்களிலும் , தேர்தல் களத்திலும் திமுக காலத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை, மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் அதிமுக இந்த பிரச்சாரத்தை துவக்கியுள்ளது .

இந்த முற்றுப்புள்ளி வைப்போம் பிரச்சாரம் முதலில் ட்விட்டர் தளத்தில் துவங்கப்பட்டது, ஆரம்பித்த ஓரிரு மணிகளில் வைரலாக பரவியது. திமுக ஆட்சியில் நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், மின் வெட்டால் மக்கள் பட்ட துன்பங்கள், நில அபகரிப்பு மற்றும் ரௌடிகளால் பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள் அதிகார துஷ்புரோயோகங்கள், அத்துமீறல்கள் அவர்கள் செய்த ஊழல்கள் போன்று திமுகவின் இருண்ட கால ஆட்சியில் நடந்த கொடுமைகளை புள்ளி விவரத்தோடு மக்களுக்கு இந்த பிரச்சாரம் மூலம் கொண்டு செல்லப்படும்.

வெற்றிநடைபோடும் தமிழகம் என்ற பிரச்சாரத்தை அதிமுக அரசு மேற்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட நலத்திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகளை மக்களுக்கு மீண்டும் நினைவூட்டியது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நேரடியாக அரசு செய்த சாதனைகளை மக்களிடத்தில் பட்டியலிட்டுக் காட்டினார். ஆனால் திமுக காலத்தில் நடைபெற்ற அக்கிரமங்களையும் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்று அதிமுக நம்புகிறது.

எனவே திமுக காலத்தில் நடைபெற்ற மக்கள் விரோத செயல்களை, திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்கிற இந்த பிரச்சாரம் மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லும் வாரத்திற்கு ஒரு பிரச்சினையை எடுத்து அந்த பிரச்சினை சார்ந்த அனைத்து விஷயங்களையும் புள்ளிவிபரங்களோடு ஆதாரத்தோடு மக்கள் மத்தியில் இந்த பிரச்சாரம் மூலம் வைக்கப்படும் .

தேர்தல் வரை இது தொடர்ந்து நடைபெற்று, வாக்களிக்க உள்ள மக்களை மனசாட்சிப்படி யோசிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிரச்சாரம் துவக்கப்பட்டது.