Adam Gilchrist and Virat Kohli
Adam Gilchrist and Virat Kohli

Adam Gilchrist and Virat Kohli – இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டிகள் சமனில் முடிந்தது.

டி-20 தொடரை சமனில் முடித்துள்ளதால் இந்திய அணி சற்று தெம்புடம் உள்ளது. அடுத்தது டிசம்பர் 6-ஆம் தேதி நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இந்திய வீரர்கள் கேப்டன் கோலிக்கு ஆதரவாக மற்றும் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இவர் தெரிவிப்பதன் மூலம் மட்டும் இல்லை, இந்திய அணி முழு ஈடுபாடுடன் மற்றும் ஒற்றுமையுடன் விளையாடினால் வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை.

நடக்க இருக்கும் போட்டி புது மைதானதில் நடக்க இருக்கின்றது, இது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலக இருக்கும்.

எனவே இந்திய பந்து வீச்சாளர்கள் புதிய முறைகளையும் பந்து நன்றாக சுழலும் படியும், மேலும் நன்றாக பவுன்ஸாகும் படியும் பயிற்சி எடுக்க வேண்டும்.

அதே சமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள், ஆஸ்., அணியின் பந்து வீச்சாளர்களில் வீச்சை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் மட்டுமே இந்திய அணி வெற்றியை பெற இயலும்.