Pushpa 2

13 வருடங்களுக்கு பிறகு, நடிகை வித்யா கர்ப்பம்: வைரலாகும் போட்டோஸ்..

குழந்தைச் செல்வம் ஈன்ற போகிறார் நடிகை வித்யா. அதுவும் 13 வருடங்களுக்கு பிறகு குழந்தைப் பேறு கிட்டியிருக்கிறது. இந்த மகிழ்வான செய்தி குறித்து பார்ப்போம்..

வித்யா பிரதீப் கடந்த 2010 ஆம் ஆண்டு, இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில், ஜெய் நடிப்பில் வெளியான ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் டான்ஸர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் தன்யா என்கிற சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும், இவரின் நடிப்பு மற்றும் டான்ஸ் ரசிக்கப்பட்டது.

இதனைத் தொடந்து வந்த படம் ‘விருந்தாளி’. இதில் ஹீரோவாக மைக்கில் ஈஸ்வர் நடித்திருந்தார்.நடித்து கொண்டிருக்கும் போதே, ஹீரோவான மைக்கிலை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 18 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார் வித்யா.

திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய காதல் மனைவிக்கு மைக்கில் உறுதுணையாக இருந்து, அவரை பயோ டெக்னாலஜி முதுகலை பட்டம் வரை படிக்க வைத்ததோடு, ஒரு நடிகையாக இருப்பதற்கும் சுதந்திரம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வித்யா பிரதீப் நடித்த ‘சைவம்’ திரைப்படம் தான் இவரது திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக எனலாம்
மேலும், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- அமலாபால் நடிப்பில் வெளியான பசங்க 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள வித்யா பிரதீப், சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாயகி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதையும் கவர்ந்தார்.

இவருக்கு திருமணம் ஆன தகவல், பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் தனக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என சமூக வலைதளத்தில், கணவருடன் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வெளிப்படுத்தினார்.

தற்போது, வித்யா பிரதீப் திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்கு பின்னர், தனக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ள தகவலை அறிவித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வயிற்றுடன், கணவருடன் ரொமான்டிக்காக இவர் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ், வைரலாகி வருகிறது. வாழ்த்துவோமே.!

actress vidya pradeep announced her pregnancy photos
actress vidya pradeep announced her pregnancy photos