இந்த வாரம் டபுள் எவிக்க்ஷனா? ஓட்டிங் நிலவரம் இதோ..!
பிக் பாஸ் எவிக்சன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வார நாமினேசன் பட்டியலில் அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித் ,ஜாக்லின் ,பவித்ரா, சுனிதா, ஆனந்தி ,அன்சிதா, முத்துக்குமரன் என பதினோரு பேர் நாமினேட் ஆகிய இருந்த நிலையில் ரஞ்சித் ஃப்ரீ பாஸ் மூலம் சேவ் ஆகியுள்ளார்.
குறைவான ஓட்டுக்களுடன் ஆனந்தி , சாச்சனா மற்றும் சுனிதா ஆகியோர் கடைசி மூன்று இடங்களில் உள்ளனர். ஏற்கனவே தீபாவளி கொண்டாட்டம் மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரி என்ற காரணத்தால் சென்ற வாரம் எலிமினேஷன் கேன்சல் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் நடக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதில் இந்த இந்த மூன்று நபர்களில் யாராவது இருவர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. யார் வெளியேறப் போகிறார் என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம். இதில் யார் வெளியேறலாம், வெளியேறக்கூடாது என்று எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.