நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் முக்கியமான பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் கதாநாயகியாக பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பயங்கரமான வில்லி கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார். தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய வரலட்சுமி எப்போதும் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது தனது பயத்தை தகர்த்தெறிந்து அசத்திருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், சிறுவயது மற்றும் இளம் வயதினரான நாங்கள் ஒருபோதும் பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை. மற்றும் சில காரணங்களுக்காக. ஆனால் பயத்திலிருந்து விடுபட்டு அதைச் செய்ய நான் நேரத்தை முடிவு செய்தேன் எனக் குறிப்பிட்டு ஆரம்ப கட்டமாக சைக்கிள், ஸ்கூட்டி என தொடங்கி புல்லட் வரை வந்திருப்பதாக கூறி அவற்றை ஓட்டும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். மேலும் அதில், முதலில் தனக்கு கொஞ்சம் கவலை, பயம் ஏற்பட்டது உண்மைதான் என்றும் தன்னுடைய பயிற்சியாளர் மிகவும் சிறந்த முறையில் தனக்கு கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.