காதலர் தினத்தின் ஸ்பெஷலாக நடிகை திரிஷா லியோ படபிடிப்பு தளத்திலிருந்து பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியன் செல்வன் 1 மற்றும் ராங்கி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் தற்போது காஷ்மீரில் தீவிரமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் லியோ படபிடிப்பு தளத்திலிருந்து பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.