நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் க்யூட் லுக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் நடிகை திரிஷா இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பலவிதமான அழகிய ஆடைகளில் படக்குழுவுடன் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற பிரமோஷனில் பங்கேற்ற திரிஷாவின் ரீசன்ட் க்யூட் லுக் வீடியோ ரசிகர்களால் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.