காதல் வதந்திகள் குறித்து நடிகை தமன்னா பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து அசத்திய இவர் தற்போது பாலிவுட் திரை உலகில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீவிரமாக உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக வதந்திகள் இணையத்தில் தீவிரமாக பரவி வந்தன.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் விளக்கம் அளித்துள்ள தமன்னாவின் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன் அவ்வளவுதான். இதுபோன்ற அதிகம் பரவும் காதல் வதந்திகள் அனைத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. நடிகர்களைவிட நடிகைகளே அதிகமாக திருமண வதந்திகளில் சிக்குகிறார்கள். அது ஏன் நடக்கிறது என்று புரியவில்லை என ஆவேசமாக அப்பேட்டியில் பேசி இருக்கிறார்.