நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் ரிலீஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. தமிழில் ஜிவி பிரகாஷின் டார்லிங் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிசயமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் குக்காக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் ஸ்ருஷ்டி தற்போது க்யூட்டான உடையில் லேட்டஸ்ட்டாக செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.