Sona
படங்களில் நடிக்காதது ஏன்? என கவர்ச்சி நடிகை சோனா அறிக்கை ஒன்றின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருந்தார்.

இவர் தற்போது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நான் ஏன் படங்களில் நடிப்பதில்லை என நிறைய பேர் கேட்கிறார்கள்.

இந்த வருடத்தில் மொத்தம் 4 படங்களில் நடித்துள்ளேன், 12 படங்களை நிராகரித்துளேன். நிம்மதியான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை. தற்போது குடிப்பதை நிறுத்தி விட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் 2020-ல் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்கள் அமையும் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.