Actress Sneha Workout Video

உடல் எடையை குறைக்க இரண்டாவது குழந்தையுடன் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சினேகா.

Actress Sneha Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது மீண்டும் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட சினேகாவிற்கு சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு மீண்டும் குண்டாகி விட்டார் சினேகா.

இதனால் அவர் தற்போது உடல் எடையை குறைக்க வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

இது குறித்த வீடியோ ஒன்றை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சினேகா இறுதியாக தனுஷுக்கு ஜோடியாக பட்டாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.