Actress Simran Upcoming Movies
Actress Simran Upcoming Movies

Actress Simran Upcoming Movies : தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வரும் நடிகைகளுக்கு திருமணத்திற்குப் பின்னர் அதேபோல் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

ஆனால் தமிழ் சினிமாவில் ஜோதிகா அமலா பால் போன்ற சில நடிகைகள் மட்டுமே கதாநாயகியை மையமாகக் கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றனர்.

1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, கமல், அர்ஜுன், விஜயகாந்த் என அத்தனை முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் வாய்ப்பில்லாமல் போனதால் படங்களில் அம்மா வேடங்களிலும் அக்கா வேடங்களிலும் நடித்தார். சீமராஜா படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார்.

அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அதன்பின்னர் கதாநாயகியாக கொண்ட கதைகளில் நடிக்க முயற்சி செய்தும் எந்த வித கதையும் அமையவில்லை.

வழியில்லாமல் தெலுங்கு சினிமாவில் உருவாக உள்ள ஒரு படத்தில் ஆகாஷ் பூரி என்ற அறிமுக நடிகருக்கு அத்தையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதாவது இந்த படத்தில் நாயகியின் அம்மாவாக நடிக்க உள்ளார்.

அறிமுக நடிகரான ஆகாஷ் பூரி என்பவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான பூரி ஜெகநாத்தின் மகன் ஆவார்.

இந்த படத்திற்கு ரொமாண்டிக் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி படமும் படு ரொமான்டிக்காக உருவாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.