டப்பா ரோலை விட, ஆன்ட்டி ரோலில் நடிக்கலாம்: நடிகை சிம்ரன் ‘பளார்’ பதிலடி
சிறந்த டான்ஸர் & சிறந்த ஆர்டிஸ்ட் என்பது சிம்ரன் என்பதை திரையுலகம் அறியும். இந்நிலையில், அவர் பகிர்ந்த நிகழ்வு ஒன்றை காண்போம்..
‘தல’ அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில், அஜித் அவரை கலாய்க்கும் விதமாக (அதாவது, வாலி படத்தை நினைவுகூரும் விதமாக) ‘இடுப்பை பத்திரமாக பார்த்துக்கோங்க’ என்பார். பின்பு, ‘இல்லை, உடம்பை பார்த்துக்கோ’ என சொல்வார். இந்த காட்சிக்கு விசில் சத்தம் பறந்தன. சிம்ரன் ஆடிய ‘சுல்தானா’ பாடலும் இப்படத்தில் இடம்பிடித்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதைத்தொடரந்து, சிம்ரன் சசிகுமாருடன் இணைந்து ‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்ரன் திரையில் காமெடி கலந்த சீரியஸான டிராமா படங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார்,
‘சிம்ரன் மேடம் எனக்கு ஜோடி என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களது நடனத்தை பார்த்து வியந்திருக்கிறேன். வித்தியாசமான படங்களில் நடித்து பாராட்டை பெற்றவர். அவர் மாதிரி ஒரு அழகை பார்த்தது இல்லை’ என்றதும் சிம்ரன் வெட்கப்பட்டார்.
இந்நிலையில், விருது விழாவில் கலந்துகொண்ட சிம்ரன் ‘சக நடிகைகள் நம்மை விட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும்போது பாராட்டுவது உண்டு’ என தெரிவித்தார். அப்போது ‘அந்த நடிகை கூறிய வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை’ என கூறினார்.
பின்னர் பேசிய சிம்ரன், ஒரு படம் பார்த்தேன் பிடித்திருந்தது. அந்த ரோலில் உங்களை பார்த்தது எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது என அவருக்கு மெசேஜ் செய்தேன். ஆனால், அவர் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது’ என எனக்கு மெசேஜ் செய்தார். அவரிடம் இருந்து இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை.
நான் என்ன சொல்கிறேனோ, அது என்னுடைய கருத்தாக இருக்கும். ஆனால், நான் அனுப்பிய மெசேஜிற்கு நல்ல பதில் வரும் என்று எதிர்பார்த்தது என் தவறு தான். டப்பா ரோல்களில் நடிப்பதை விட முக்கியமான ஆன்ட்டி ரோல்களை தேர்வு செய்து நடிக்கலாம். ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ படத்தில் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்’ என சிம்ரன் கூறி முடித்தார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சிம்ரன் கூறிய நடிகை யாராக இருக்கும் என நெட்டிசன்ஸ் தேடுதலில் இறங்கியுள்ளனர். அந்த நடிகை மாட்டினால், வறுத்தெடுத்து விடுவர் என தெரிகிறது.