Web Ads

திருமணமாகி 2 மாதத்திற்கு பிறகு, நடிகை சாக்‌ஷி அகர்வால் ஹனிமூன்

தொழில் மீது கொண்ட பக்தி காரணமாக, ஹனிமூனுக்கு மிக மிக தாமதமாக சென்ற சாக்‌ஷி பற்றிப் பார்ப்போம்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் மாடலிங்கில் ஈடுபட்டு, விளம்பரப் படங்களில் நடித்த இவர், சினிமா வாய்ப்பை தேடியபோது, அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இது குறித்து சாக்‌ஷி, ‘அந்த படத்தில் நான் நடித்திருக்கவே கூடாது, ஒரு நல்ல கதாபாத்திரம், படம் முழுக்க வருவீர்கள் என்று சொன்னார்கள். அதனால், அவர்கள் சொல்வதை உண்மை என்று நம்பி இரண்டு நாள் சூட்டிங் போனேன். பிறகு அவர்கள் கூப்பிடுவார்கள் என காத்திருந்தேன். ஆனால், படத்தோட சூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டது.

அந்த படத்தால் பல நல்ல வாய்ப்புகள் கைவிட்டு போய்விட்டது’ என வருத்தத்துடன் கூறியிருந்தார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சி 3-வது சீசனில் பங்கேற்று கொஞ்சம் பிரபலமாகி, டெடி, அரண்மனை 3, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நான் கடவுள் இல்லை’ படங்களில் நடித்தார்.

அண்மையில், வெளியான ‘ஃபயர்’ படத்தில் தாராள கவர்ச்சியுடன் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை சாக்‌ஷி தனது சிறு வயதிலிருந்தே நண்பராக பழகிய நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் முடிந்த கையோடு சாக்‌ஷி அகர்வால், கணவருடன் ஹனிமூன் செல்லாமல், ஃபயர் பட புரொமோஷனில் கலந்துகொண்டார்.

தற்போது திருமணமாகி இரண்டு மாதத்திற்கு பிறகு, கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.

அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், திருமணமானதும் இப்படி மாறிட்டாரே எனக் கூற, பதிலுக்கு சில நெட்டிசன்ஸ், திருமணத்துக்கு முன்பும் அவர் தாராளம்தான்’ என கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.