Web Ad 2

என் பெற்றோரிடம் கேட்கும் மன்னிப்புதான் ‘டிராகன்’ படம்: இயக்குனர் அஷ்வத் பதிவு

அனுபவம் தானே நல்ல பாடம். அவ்வகையில் உருவானது ‘டிராகன்’ படம் என்கிறார் அஷ்வத். இது பற்றிய படிப்பினையை பார்ப்போம்..

பிரதீப் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படம் தற்போது 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

‘லவ் டுடே’ வெற்றியை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்துள்ள இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கயாடு லோகர், கே. எஸ். ரவிகுமார், கெளதம் மேனன் உள்பட பலர் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

முன்னதாக, படம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமூக கருத்துள்ள படைப்பாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமூக அக்கறையுள்ள படத்தை அனைவரும் பிடிக்கும் விதமாக இயக்கி கவர்ந்துள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. இந்நிலையில், தனது பெற்றோர் குறித்து அஷ்வத் பகிர்ந்துள்ள பதிவில் தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து,

‘மாரிமுத்து என்கிற தனபால். அப்பறம் எங்க போனாலும் அவர் போட்டுட்டு போற ஜோல்னா பை. சித்ரா என்கிற சித்ரா.

நான் டாக்டராக வேண்டும் என்ற என் பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத எஞ்சினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்புதான் ‘டிராகன்’ படம்”. இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் 51-வது படத்தை இயக்கவுள்ளார்.

director ashwath marimuthu share post about his parents