தனுஷ் இயக்கிய படமும், பிரதீப் நடித்த படமும் கலெக்ஷன் விவரம்
‘நீக்’ படம் மற்றும் ‘டிராகன்’ பட வசூல் பற்றிப் பார்ப்போம்..
பன்முகத் திறமை கொண்ட தனுஷ், ‘ராயன்’ படத்தை இயக்கியதை அடுத்து, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தி உள்ளார்.
பவிஷ்க்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.
வழக்கமான ஒரு காதல் கதையை படமாக்கி இருக்கும் தனுஷ், இதன் திரைக்கதையில் சொதப்பியதால், கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், இப்படத்திற்கு போட்டியாக ரிலீஸான ‘டிராகன்’ திரைப்படம் செம மாஸான வரவேற்பை பெற்று, தற்போது 50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் வசூலில் செம அடி வாங்கியுள்ளது.
‘டிராகன்’ படத்துக்கு நிகராக இப்படமும் அதிக திரையரங்குகளில் ரிலீஸானது. ஆனால், முதல் நாளில் இருந்தே ‘டிராகன்’ படம் பிக் அப் ஆனதால் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படக் காட்சிகள் படிப்படியாக குறைக்கப்பட்டன.
இன்று டிராகன் படத்துக்கு 1577 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. அதே வேளையில், நீக் படத்துக்கு வெறும் 841 காட்சிகள் தான் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
முதல் 2 நாட்களில் இந்தியாவில் ரூ.3 கோடி வரை வசூலித்திருந்த இப்படம் நேற்று ரூ.1.36 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சனிக்கிழமை வசூலை விட மிகவும் குறைவு. சனிக்கிழமை இப்படம் ரூ.1.8 கோடி வசூலித்து இருந்தது. இதே நிலை நீடித்தால் “நீக்” படம் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.