நடிகை ரம்யாவின் ஹனிமூன் ஹாட் போட்டோ; இணையத்தில் வைரலாகிறது..
நடிகை ரம்யா தனது தேனிலவு போட்டோவை இணையத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார். அது சக்கைப் போடு போட்டு தற்போது வைரலாகி வரும் நிகழ்வு குறித்து காண்போம்..
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, சினிமா வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த ரம்யாவிற்கு சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்பட்ட போதும் அடுத்தடுத்து பட வாய்ப்பு வரவில்லை.
இதைத்தொடர்ந்து, மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன், மாலை நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது, ரம்யா பாண்டியனின் கைவசம் இடும்பன்காரி என்கிற படம் மட்டுமே உள்ளது.
ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டரை காதலித்து வருவதாகவும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் தீபாவளி அன்று தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, ரம்யா பாண்டியனுக்கும் அவரது காதலர் லவல் தவானுக்கும் நவம்பர் 8-ந் தேதி ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.
இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில், ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஹனிமூன் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவில் ரம்யாவின் காதல் கணவர், ரம்யாவின் பின்புறம் நின்றவாறு கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க, ரம்யா வெட்கத்தில் சிரிக்கிறார்.
இவர்கள் திருமணம் செய்த அதே ரிஷிகேஷிலேயே ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி தெறிக்கிறது, ரசிகர்களுக்கு இனிக்கிறது. ஆம், தேனிலவு போட்டோஸ் கசக்கவா செய்யும்..!