தளபதி 67 திரைப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்து இருப்பதாக படக்குழு போஸ்டருடன் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். தமிழில் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்ததைத் தொடர்ந்து அதனை படக்குழு தற்போது போஸ்டருடன் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அதில், ‘கெஸ் பண்ணியிருப்பீங்கன்னு தெரியும், இருந்தாலும் பர்ஸ்ட் டைம் கேக்குற மாதிரி நினைச்சுக்கோங்க நண்பர்களே என்று குறிப்பிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அப்போஸ்டரை பகிர்ந்து இருக்கிறது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது .