சமூக வலைதளங்களில் ராஜா ராணி 2 சிவகாமியின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் வெளியானதை நிலையில் அதுகுறித்து பிரவீனா விளக்கம் அளித்துள்ளார்.

Actress Praveena Complaint on Police : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் அம்மா வேடத்தில் அதாவது சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரவீனா லலிதா பாய். வெள்ளித்திரையில் உலகில் பல்வேறு படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியான ராஜா ராணி 2 சிவகாமியின் ஆபாச புகைப்படங்கள்.. கைதான இருவர் - வெளியான அதிர்ச்சி உண்மைகள்

மேலும் சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பிரவீனா போலவே நடித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான ராஜா ராணி 2 சிவகாமியின் ஆபாச புகைப்படங்கள்.. கைதான இருவர் - வெளியான அதிர்ச்சி உண்மைகள்
மீண்டும் பழைய பார்முடன் ரஹானே- புஜாரா : கோச்சர் தகவல்

அவர்கள் பிரவீணாவின் புகைப் படங்களை மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிரவீனா வெளியிட்டுள்ள அறிக்கை அவர்களை நான் எச்சரித்தும் அவர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. இதனால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். தயவு செய்து அந்த ஐடியை பின் தொடர்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் என்னை பின்தொடர்பவர்களுக்கும் என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் தவறான புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். இப்படிக்கு உண்மையான பிரவீனா என தெரிவித்துள்ளார்.

அவர்தான் என்னை Hero-வா ஆக்குனாரு – Actor GV.Prakash Latest Speech | Rebel Movie Pooja

பிரவீனா போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.