திருமணமே வேணாம், சிங்கிளா வாழுறதே சந்தோஷம்: நடிகை பூனம் பாண்டே சர்ச்சை பேச்சு..
இனி, திருமணம் செய்யாமல் பிடித்தவர்களுடன் வாழ முடிவு செய்திருப்பதாக பூனம் பாண்டே கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
பாலிவுட் நடிகையும் ரியாலிட்டி ஷோ ஸ்டாருமான பூனம் பாண்டே, திருமணம் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக பொய் விளம்பரம் கொடுத்து ஒரே நாளில் மீடியாக்களையும், ரசிகர்களையும், நட்பு வட்டத்தில் இருந்த பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், அது ஃபேக் டெத் என தெரிய வந்ததும் பலரும் ‘பூனம் பாண்டேவை கைது செய்ய வேண்டும்’ என கொந்தளித்தனர்.
‘புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இப்படி செய்தேன்’ என பூனம் பாண்டே மன்னிப்பு கேட்டார்.
‘தனக்குத் தானே மரண வதந்தியை உருவாக்கி, அதனை விளம்பரமாக மாற்றி பல கோடிகள் காசு பார்த்தார் பூனம் பாண்டே’ என அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறைந்தது 1.5 வருடமாவது அவரை சிறையில் அடைக்க வெண்டும் என்றெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பினாலும் பாலிவுட்டில் செலிபிரிட்டியாகவே சுற்றி வருகிறார் பூனம்.
மேலும், ‘இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றால், மைதானத்தில் நிர்வாணமாக ஓடுகிறேன்’ என பேசியதில் இருந்தே டிரெண்டானவர் தான் பூனம் பாண்டே. அதன் பின்னர், தயாரிப்பாளர் சாம் பாம்பேவுடன் இணைந்து ஏகப்பட்ட நிர்வாண வீடியோக்களில் நடித்து சம்பாதித்து வந்த பூனம் பாண்டே ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டு, ஏழு ஜென்மம் சேர்ந்து வாழப் போகிறோம் என்றெல்லாம் போஸ்ட் போட்டிருந்தார்.
ஆனால், திருமணமாகி 13 நாட்களிலேயே கோவாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில், தனது கணவர் சாம் பாம்பே தன்னை பலவந்தப்படுத்துவதாகவும் மிருகம் போல அடித்து துன்புறுத்துவதாகவும் போலீஸில் புகார் அளித்து, மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர், அவரை விவாகரத்து செய்து பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
கங்கனா ரனாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பின்னர், மீண்டும் பாலிவுட் செலிபிரிட்டியாக வலம் வரும் பூனம் பாண்டே திருமணம் குறித்த கேள்விக்கு ‘திருமணம் எப்படி சந்தோஷமான செய்தியாக இருக்க முடியும், சமீப காலமாக எங்கே திரும்பினாலும் விவாகரத்து கதைகள் அதிகம் கேட்கப்படுகின்றன. நான், மறு திருமணம் செய்யப் போவதில்லை. சிங்கிளாகவே பிடித்த வாழ்க்கையை பிடித்தவர்களுடன் வாழ முடிவு செய்திருக்கிறேன்’ என
என செம கூலாக பதிலளித்தார்.
இதற்கு, ரசிகர்கள் அவரது தனிப்பட்ட கருத்தை வரவேற்றாலும், கோடி பேர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே விவாகரத்து செய்வதால், பூனம் பாண்டேவின் பேச்சை பொருட்படுத்த வேண்டாம்’ எனவும் பதிவிட்டு வருகின்றனர்.