புடவையில் தலை நிறைய மல்லிகைப்பூ.. பவித்ரா லட்சுமி வெளியிட்ட போட்டோ..!

Web Ads

பவித்ரா லட்சுமி லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

actress pavithra lakshimi latest photos viral
actress pavithra lakshimi latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி.

அதனை தொடர்ந்து சதீஷ் உடன் இணைந்து நாய் சேகர் என்ற படத்தில் நடித்திருந்தார். கொஞ்ச நாள் எந்த நிகழ்ச்சியிலும் பவித்ராவை பார்க்க முடியாமல் இருந்த நிலையில் திடீரென உடல் மெலிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

ரசிகர்கள் பலரும் பவித்ராவுக்கு என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் உடலளவில் பிரச்சனை இருந்ததாகவும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தான் மீண்டும் வருவதாகவும் அவரே பதிலளித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.