Actress Eesha Thiyol About Surya

சூர்யாவின் படங்கள் என்றால் மிஸ் செய்யாமல் பார்த்து விடுவேன் என்று கூறியுள்ளார் பாலிவுட் நடிகை.

Actress Eesha Thiyol About Surya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யாவிற்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. திரையுலக பிரபலங்கள் கூட சூர்யாவிற்கு ரசிகர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஈஷா தியோல் நான் சூர்யாவின் தீவிர ரசிகை. அவருடைய அனைத்து படங்களையும் பார்த்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகை சூர்யா குறித்து பேசியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.