மகனுடன் கியூட் போஸ் கொடுக்கும் அமலாபால், குவியும் லைக்ஸ்..!

மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அமலாபால்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவரது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் “இலை” என்று பெயர் வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மகன் இலையுடன் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram