நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் தளபதி விஜய் குறித்து நெகிழ்ச்சியான பதிவினை பகிர்ந்து இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஷால். ரசிகர்களால் இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா, சுனில், கிங்ஸ்லி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் குறித்து பகிர்ந்திருக்கும் நெகிழ்ச்சியான வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படகுழுவினருடன் தளபதி விஜய் நேரில் சந்தித்து அப்படத்தின் டீசரை போட்டு காண்பித்தார். அதன் பிறகு பல சுவாரசியமான விஷயங்களை இருவரும் உரையாடினர். மேலும் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் விஷால், விஜய் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

இதற்கு அங்கு உள்ளவர்கள் விஜயை வாழ்த்தி உள்ளனர். அதன் வீடியோவை பதிவிட்ட நடிகர் விஷால் இந்த “அன்னைகளின் வாழ்த்துக்கள் உங்களுக்காக தளபதி” எனக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.