‘ஜெயிலர்-2’ படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் விநாயகன்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில், ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, மோகன்லால், சிவராஜ்குமார், மிருணா, எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் ரஜினியுடன் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த விநாயகனும், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். இது பற்றித் தெரிவிக்கையில், ‘ஜெயிலர் 2’ குறித்து அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆம், அப்படத்தில் ஓர் அங்கமாக இருக்கிறேன். அது ஃப்ளாஷ்பேக் பகுதியா இல்லையா என்றெல்லாம் சொல்ல முடியாது. அதைப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ‘ஜெயிலர்’ தான் எனக்கு பிடித்த காமெடி ரோல்’ என தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விநாயகன் இறந்துவிடுவார். அவரை ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நெல்சன் உபயோகித்திருப்பார் என்பது உறுதியாகிறது.
வருகி 12-ந்தேதி ரஜினியின் பிறந்த நாளன்று ‘ஜெயிலர் 2’ படத்தின் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் யாரென்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

