மனைவியை விவாகரத்து செய்த விஷயத்தை சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார் பிரபல நடிகர் விநாயகன்.

தமிழ் சினிமாவில் திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விநாயகன்.

மலையாளத் திரை உலகை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தன்னுடைய மனைவி பப்பித்தவை விவாகரத்து செய்து விட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதோடு தங்களுக்கிடையேயான திருமண பந்தம் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.